Our Feeds


Thursday, August 27, 2026

Zameera

முக்கிய அறிவிப்பு: பொலிஸ் சான்றிதழ் விண்ணப்பதாரர்களுக்கு


 2026 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பொலிஸ் சான்றிதழுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அன்று சான்றிதழ் தரவுத் தொகுதி செயலிழந்ததால், விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அமைப்பில் இருந்து நீங்கியுள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மீண்டும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்ட பின்னர் சான்றிதழை வழங்க முடியும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், முந்தைய விண்ணப்பத்திற்காக அறவிடப்பட்ட 5,100 ரூபாய் கட்டணம், விண்ணப்பதாரர் செலுத்திய அட்டையிலேயே  மீண்டும் மீளளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தல், அறிக்கைகளை அழைத்தல் மற்றும் சான்றிதழ்களை அச்சிடுதல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படும் தரவுத் தொகுதி ஓகஸ்ட் 20 ஆம் திகதி பிற்பகல் 12.50 மணி முதல் செயலிழந்திருந்த நிலையில், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்திற்கு (ICTA) தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அது சீர்செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, தற்போது வழமை போன்று சான்றிதழ் அறிக்கைகளுக்காக இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »