கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
அமைச்சர் கே.டி. லால் காந்தவின் மைத்துனரான சுரங்க ரன்ஜித் சமரவீர என்பவர், கேகாலை மோசடி புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.10 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தமை தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேகாலை, சமகி மாவத்தை பகுதியைச் சேர்ந்த சுரங்க ரஞ்சித சமரவீர என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (12) கேகாலை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சுசந்த சுதர்சன என்ற சந்தேகநபர், அமைச்சர் கே.டி. லால் காந்தவின் மனைவியின் சகோதரியின் கணவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
.jpeg)