Our Feeds


Wednesday, August 26, 2026

Zameera

கேட்விக் விமான சக்கரப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நபர்


 லண்டன் கேட்விக் (Gatwick) விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றின் சக்கரப் பகுதியில்  அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


சடலமாக மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர், கடுமையான குளிர் மற்றும் ஒட்சிசன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


கடந்த ஜூன் 16ஆம் திகதி மொராக்கோவின் டான்ஜியர் (Tangier) நகரிலிருந்து கேட்விக் விமான நிலையத்தை வந்தடைந்த 'எயர் அரேபியா' (Air Arabia) விமானத்தின் லேண்டிங் கியர் (landing gear) பகுதியில் இருந்து இந்நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 


விமானத்தைப் பரிசோதித்த தரைக்கட்டுப்பாட்டுப் பொறியாளர் ஒருவர் சடலத்தைக் கண்டுப்பிடித்ததையடுத்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதிசெய்யப்பட்டது.


ஹார்ஷாம் (Horsham) மரண விசாரணை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இந்நபரின் மரணம் தொடர்பான விசாரணையை அப்பகுதியின் மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர் (Joseph Turner) ஆரம்பித்து வைத்தார்.


பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, மாரடைப்பு, ஹைபோக்சியா (hypoxia - உடலுக்குப் போதிய ஆக்சிஜன் கிடைக்காத நிலை) மற்றும் ஹைபோதெர்மியா (hypothermia - உடல் வெப்பம் மிகக் கடுமாகக் குறைதல்) ஆகிய காரணங்களினாலேயே இந்நபரின் மரணம் சம்பவித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


விமானத்தின் சக்கரப் பகுதி மிகக் கடுமையான குளிரையும், குறைந்த அளவிலான ஒட்சிசன் மட்டத்தையும் கொண்டிருந்திருக்கும் எனக் குறிப்பிட்ட மரண விசாரணை அதிகாரி ஜோசப் டர்னர், இது ஒரு "இயற்கைக்கு மாறான மரணம்" எனக் கருதுவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »