Our Feeds


Wednesday, August 26, 2026

Zameera

ரக்னா அரக்ஷக லங்கா நிறுவனத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் விஜயம்




 பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) ரக்னா அரக்ஷக லங்கா (Rakna Arakshaka Lanka) நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். 


இதன்போது ரக்னா அரக்ஷக லங்கா நிறுவனத்தின் தலைவர் பிரிகேடியர் ஜூட் பெர்னாண்டோ (ஓய்வு) உள்ளிட்ட குழுவினர் பிரதி அமைச்சரை வரவேற்றனர். 


நிறுவனத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் எதிர்கால மூலோபாய திட்டங்கள் குறித்து இதன்போது பிரதி அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. 


நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழிய மத்தியில் உரையாற்றிய பிரதி அமைச்சர், நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக அவர்கள் வழங்கி வரும் அர்ப்பணிப்பைப் பாராட்டியதுடன், நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள எதிர்கால இலக்குகள் மற்றும் நோக்கங்களை வெற்றிகரமாக அடைவதற்குத் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்படுமாறு அறிவுறுத்தினார். 


மேலும், கடமைகளை நிறைவேற்றும் போது உயர் செயல்திறன், தொழில்முறை தரம் மற்றும் குழு உணர்வைப் பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் நாட்டிற்கு அத்தியாவசியமான அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தேசிய செயல்பாட்டிற்கும் வலுவான பங்களிப்பை வழங்குமாறு வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »