இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டெம்பரில் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது விஜயம் அமையவுள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம், பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொந்தாவை சந்தித்திருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாம் சிங்களின் விஜயம் சம்பந்தமான முன்னாயர்த்த நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
