Our Feeds


Sunday, August 16, 2026

Zameera

பண்டாரகமையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை : சந்தேகநபர் கைது


 பண்டாரகமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெலேகடே வீதிப் பகுதியில் வாலனை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


நேற்று சனிக்கிழமை (15) நண்பகல் வேளையில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது 562 லீற்றர் (750 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம், 4,094 லீற்றர்  (26 பீப்பாய்கள்) கோடா மற்றும் மதுபானம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 4 செப்புச் சுருள்கள், 2 நீர் மோட்டார்கள், 7 எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பெருமளவிலான உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுப் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இச் சம்பவத்தில் பாதுகாப்பான முறையில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பில் பண்டாரகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »