Our Feeds


Monday, August 10, 2026

ShortNews

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!


கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல நகரங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதுடன் 107 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போகோட்டாவிலிருந்து சுமார் 280 கிலோமீட்டர் மேற்கே, சொக்கோ திணைக்களத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மாரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »