Our Feeds


Tuesday, September 1, 2026

Zameera

22ஆவது திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் - ரஜீவ் அமரசூரிய


 அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற திருத்தச் சட்டமூலம் ஆகிய இரு சட்டமூலங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 


அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதிமன்ற திருத்தச் சட்டமூலம் மக்களின் இறையாண்மையுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளது.


மக்களின் இறையாண்மையை தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. ஆகவே முன்மொழியப்பட்டுள்ள இவ்விரு சட்டமூலங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »