Our Feeds


Wednesday, September 30, 2026

Zameera

நீர்கொழும்பு சிறை மோதல்: 25 பெண் கைதிகளை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்த உத்தரவு

 

(செ.சுபதர்ஷனி)


நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் பெயரிடப்பட்டுள்ள 25 பெண்  கைதிகளை அடையாள அணிவகுப்பில்  முன்னிலைப்படுத்தி அவர்களை அடையாளம் காண்பதுக்காக, பெண் சிறைக்காவலர்களுக்கு அழைப்பாணை விடுக்குமாறு  நீர்கொழும்பு  நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சிறைச்சாலையில் இருநாட்கள் தொடர்ந்த மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றையதினம்  நீர்க்கொழும்பு நீதிவான் சிலானி பெரேரா  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.


கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் போது 10 சிறைச்சாலை அதிகாரிகளும், சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த  22  கைதிகளும் உயிரிழந்ததுடன், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பொதுச்சொத்துச் சட்டம்,  துப்பாகிச் சட்டம் மற்றும் மனித படுகொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.



இவ்வழக்கு  நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு (1) இன் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் சந்தன களுஆரச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.


விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 106 பேர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 81 ஆண்களும் 25 பெண்களும் உள்ளடங்குகின்றனர். மேலும் 96 சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட பெண் சந்தேகநபர்கள் மற்றும் சாட்சியாளர்கள் ஒரே சிறைச்சாலையில் தங்கியிருந்தால், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாதவகையில், வெவ்வேறு வார்டுகளுக்கு  அல்லது சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறும், அடையாள அணிவகுப்புக்காக அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறும் ” மன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.  


அத்துடன், பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் வழக்கு முடியும் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.   மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த அனைவரினதும் மரண விசாரணை அறிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த  குற்றப்புலனாய்வு அதிகாரிகள், அது தொடர்பிலான உத்தரவுகளை வழங்குமாறும் கோரினர்.


மன்றில் முன்னவைக்கப்பட்ட சமர்பணங்களை பரிசீலித்த நீதிவான், வழக்கில்  சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள 106 பேரையும்  எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அதேநேரம், அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்தப்படாத ஏனைய சந்தேகநபர்களை  வாட்சம் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார்.


அத்துடன், சாட்சியாளர்களும் சந்தேகநபர்களும் ஒன்றிணைவதைத் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட  நீதிவான் உயிரிழந்தவர்களின் மரண பரிசோதனைகள் தொடர்பான உத்தரவு பின்னர்   அறிவிக்கப்படும் என்றார். இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »