Our Feeds


Wednesday, September 30, 2026

Zameera

பாணந்துறை பகுதியில் கடத்தப்பட்ட வர்த்தகர் மீட்பு


 பாணந்துறை, வலான, மகாநாம வீதிப் பகுதியில் கடத்தப்பட்ட வர்த்தகர் மினுவன்பிட்டிய மயானத்திற்கு அருகில் கைவிடப்பட்டுள்ளார். 


நேற்று (29) இரவு 10 மணியளவில் குறித்த வர்த்தகர் தனது காரில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


வேறொரு காரில் வந்த கும்பலொன்று அவரைப் பின் தொடர்ந்து சென்று, வர்த்தகரின் வாகனத்தைத் தாக்கி, அதன் கண்ணாடிகளை உடைத்தே இக்கடத்தலை மேற்கொண்டுள்ளது. 


இச்சம்பவத்தில் வர்த்தகரின் இரு மகள்களுக்கும் எவ்வித காயமும் ஏற்படாத நிலையில், காயமடைந்த வர்த்தகரின் மனைவி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கடத்தப்பட்ட வர்த்தகரும் தற்போது அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 


பணத்தகராறு காரணமாகவே இக்கடத்தல் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 


வர்த்தகரின் காருக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பாணந்துறை குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »