Our Feeds


Friday, September 4, 2026

Zameera

9 இந்திய மீனவர்கள் விடுதலை


 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த 9 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். 


சந்தேகநபர்கள் நேற்று (3) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மேலதிக நீதிவான், 1 ஆம் மற்றும் 2 ஆம் குற்றச்சாட்டுக்களுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனையும், 3 ஆவது குற்றச்சாட்டுக்கு தலா ஒருவருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது. 


அதேநேரம் ஏற்கனவே இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மீனவர் ஒருவர் இரண்டாவது முறையாகவும் கைதாகியிருந்த நிலையில் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட்ட நிலையில், அதற்கு மேலதிகமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இந்த நிலையில் குறித்த 9 மீனவர்களையும் நிபந்தனையின் அடிப்படையில் மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »