Our Feeds


Wednesday, September 16, 2026

SHAHNI RAMEES

நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

 


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக, ஏர்பஸ்

விமானங்களைக் கொள்முதல் செய்ததில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முறைகேடு தொடர்பான விசாரணையில் சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை   எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டது. 


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான பிணை மனு தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »