(இராஜதுரை ஹஷான்)
பழைய தேர்தல் முறைமை குறித்து 2017 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர் இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.நாட்காட்டியைத் தேர்ந்தெடுங்கள்
கம்பஹா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்துக்கு எதிராக மக்களை ஒன்றுத்திரட்டுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அநுராதபுரத்தில் கூட்டத்தை நடத்தினார்கள். அந்த மேடையில் சகல ஊழல்வாதிகளும் ஒன்றிணைந்தார்கள். கடந்த காலங்களில் ராஜபக்ஷர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் மீண்டும் மஹிந்தவை தஞ்சமடைந்துள்ளார்கள்.
இவர்களின் அரசியல் கலாசாரம் இதுவே. சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவார்கள்.கடந்த காலங்களில் இவர்கள் தமது சுய நல தேவைகளுக்காகவே அரசியல் செய்தார்கள். தற்போது மீண்டும் தமது சுயநல தேவைகளுக்காக மீண்டும் ஒன்றிணைந்துள்ளார்கள்.
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். 2017 ஆம் ஆண்டு எதிர்க்கட்சித தலைவர் சஜித் பிரேமதாச அமைச்சு பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கம் தான் மாகாணசபைத் தேர்தலை நெருக்கடிக்குள்ளாக்கும் சட்டத்தை உருவாக்கியது.
பழையத் தேர்தல் முறைமை குறித்து 2017 ஆம் ஆண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர் இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள்.மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டவுடன் தேர்தல் நடத்தப்படும்.
முறையற்ற மற்றும் மோசடியான பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் முறையற்ற அரச நிர்வாகமே தோற்றம் பெறும். தேர்தல் முறைமைக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு காணப்படும் என்றார்.