Our Feeds


Monday, September 14, 2026

Zameera

பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

 


(இராஜதுரை ஹஷான்)


பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.


நொச்சியாகம பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும்நிலையில் தான் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளோம்.இருப்பினும் பொருளாதார சுயாதீனத்தை இன்னும் அடையவில்லை.



பொருளாதார சுயாதீனத்தை அடைவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரத்துறைi பாதுகாப்பதற்கும், மக்களுக்கான சேவை வழங்கலையும் வினைத்திறனாக்க அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படும்.


பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதிசேர் வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அதற்குரிய திட்டங்கள் முன்வைக்கப்படும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »