Our Feeds


Tuesday, September 29, 2026

ShortNews

இன்று முதல் மீண்டும் அமலுக்கு வரும் விதிமுறைகள்...!


கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பஸ் செல்வதற்கான முன்னுரிமைப் பாதை விதி முறைகள் இன்று (29) முதல் மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறித்த விதி முறைகள் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் அமல்படுத்தப்படும்.

இந்தத் திட்டம் இன்று முதல் ஒரு முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இத்திட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

பஸ் முன்னுரிமைப் பாதை சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமல்படுத்துமாறு அனைத்துக் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், இன்று முதல் மேலும் 5 பாதைகளில் மெட்ரோ பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக 122 மெட்ரோ பஸ்கள் கடமையில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் யு.பி. திலகரத்ன தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »