Our Feeds


Tuesday, September 15, 2026

Zameera

முன்னாள் பொலிஸ்மா அதிபரினால் ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

முன்னாள் பொலிஸ்மா அதிபரினால் ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. 


2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் மூலம், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் இருவர் மீறியுள்ளதாக இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.


அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையச் செயற்பட்டதன் மூலம், ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக சில்வா மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன ஆகியோர் மீறியுள்ளதாக நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »