Our Feeds


Tuesday, September 8, 2026

Zameera

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம்

 

நாளை (09) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 


அச்சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவிக்கையில், அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள் தொடர்பில் தமது சங்கம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார். 


அரசுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின் பற்றாக்குறை மற்றும் தகுதியான விரிவுரையாளர்கள் இல்லாமை என்பன கடுமையான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் கூறிய அவர், தற்போது 2025 உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


ஜனாதிபதி புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை உருவாக்குவதாகக் கூறிய போதிலும், புதியவற்றை உருவாக்குவதற்கு முன்னர் தற்போதுள்ள 17 பல்கலைக்கழகங்களின் தரத்தைப் பேணிப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார். 


இது தொடர்பில் கலந்துரையாடுவதற்குத் தமது சம்மேளனம் எதிர்பார்ப்பதுடன், இதற்கு நிலையான தீர்வு அவசியமானது என்றும் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »