Our Feeds


Wednesday, October 21, 2026

Zameera

இணையவழி பண மோசடி - 26 வயது சந்தேகநபர் கைது!

 

இணையவழி வர்த்தகம் (Online Business) மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கணினி குற்றவியல் விசாரணை பிரிவின் வடமேல் மாகாண அலகினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


டெலிகிராம் (Telegram) சமூக வலைத்தளம் ஊடாகத் தொடர்புகொண்ட நபர் ஒருவர், இணையவழி வர்த்தகம் மூலம் பணம் ஈட்ட முடியும் எனக் கூறி 151,000 ரூபாய் பணத்தைச் சந்தேகநபரின் வங்கிச் கணக்கில் வைப்பிலிடச் செய்து மோசடி செய்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.


 


டெலிகிராம் மூலம் குறித்த இணையவழி வர்த்தகம் மூலம் ஒரு கோடியே முப்பத்தைந்து இலட்சத்து ஏழாயிரத்து இருநூற்று இருபது (13,507,220) ரூபாய் வரை பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, அதில் 151,000 ரூபாய் பணத்தைச் சந்தேகநபர் தனது வங்கிச் கணக்கில் வைப்பிலிட வைத்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 


அதன்படி, குறித்த மோசடியுடன் தொடர்புடையமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் சந்தேகநபர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.


 


சந்தேகநபர் சூரியவெவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இச்சம்பவம் தொடர்பில் கணினி குற்றவியல் விசாரணை பிரிவின் வடமேல் மாகாண அலகு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »