Our Feeds


Wednesday, October 21, 2026

Zameera

ஞானசார தேரரை விடுவிக்க உறுதியளித்தால் மட்டுமே ஜனாதிபதிக்கு பிரித் தீர்த்தம் கொடுத்து கையில் பிரித் நூல் கட்டுவோம் - கஸ்ஸப தேரர்

 

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக அவர்கள் தம்மிடம் வந்து வணங்கி, மகா சங்கத்தினரின் வல்லமையை ஏற்றுக்கொண்டு, பூஜ்ய கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினால் மட்டுமே, அவருக்கு பிரித் தீர்த்தம் வழங்கி பிரித் நூல் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பலங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி வந்து “ஐயோ, எங்களை மன்னித்து விடுங்கள். மகா சங்கத்தினர் இவ்வளவு சக்திவாய்ந்தவர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை… என் கையால் தவறு நடந்துவிட்டது, ஞானசார தேரரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறினால் மட்டுமே, பிரித் தீர்த்தம் கொடுத்து கையில் பிரித் நூல் கட்டுவதற்குத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »