Our Feeds


Friday, October 2, 2026

Zameera

பெரும்போகத்திற்கான விதைப்பு நடவடிக்கைகளை ஒக்டோபர் 5ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்க வேண்டும்

 


வானிலை எதிர்வு கூறும் ஆருடர் பேராசிரியர் நாகமுத்து பிரதீப ராஜா புதன்கிழமை (30) மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்டு இருந்தார். இதன்போது விவசாயிகள் சமூக சேவையாளர்கள் மாணவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலரை சந்தித்து மாவட்டத்தின் எதிர்கால  எல் நினோ காலநிலை பாதிப்பின் முன்னாயத்தம் பற்றியும் இயற்கை அனர்த்தம் சம்பந்தமாகவும் விளக்கமளித்தார்.



இதேவேளை இம்முறை பெரும்போகத்தில் மாகாண விவசாயிகள் கடந்த வருடத்தை போல்லன்றி இம்முறை முன்கூட்டியே 10 மாதம் 5 திகதிக்கு முன்பாகவே விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.


இன்றிலிருந்து விதைப்புக்கு தேவையான மழை  வீழ்ச்சி கிடைக்கும். இதனை விவசாயிகள் நன்கு திட்டமிட்டு வேளாண்மை செய்கைக்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும். தவறவிடும் பட்சத்தில் எதிர்வரும் வெள்ள அனர்த்தத்தின்போது கடும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.


எல்-நினோ தொடர்பிலான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.


தற்போது உலகளாவிய ரீதியில் பேசுபொருளாகியுள்ள எல்-நினோ  காலநிலை நிலைமை, அதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்  தெளிவுபடுத்தும் வகையில் இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »