Our Feeds


Thursday, October 22, 2026

Zameera

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

 

பதுளை, கண்டி, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.




நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், குறித்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




மேலும், அதிகாரிகளால் வெளியிடப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »