ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று திங்கட்கிழமை (19) கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
அதற்கமைய, இந்தச் சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டம் என உத்தியோபூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.
குறித்த சட்டமூலம் பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவினால் முதலாம் வாசிப்புக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 08 ஆம் திகதி நடைபெற்றதுடன், அங்கு அது எந்தவித வாக்களிப்புமின்றி திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுச் சம்மதிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைச் செயற்படுத்துவதில் அடையாளம் காணப்பட்ட சட்டரீதியான, பொருள்விளக்கரீதியான, நிர்வாக மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பது இதன் முக்கிய நோக்கமாகும்.
மேலும், சிங்கள மற்றும் ஆங்கிலப் பிரதிகளுக்கிடையிலான முரண்பாடுகளைக் களைதல், ஊழல் குற்றங்கள் மீதான விசாரணை மற்றும் வழக்குத் தொடர்தல் சவால்களைச் சமாளித்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.
அச்சு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் நிர்வாகப் பணிகளை மேம்படுத்துதல் மற்றும் மத்திய மின்னணு முறைமையின் வழியே சொத்து மற்றும் பொறுப்புப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறையை மேலும் சீரமைத்தல் ஆகிய இலக்குகளையும் இத்திருத்தம் கொண்டுள்ளது.
இ்ந்தத் திருத்தங்கள் ஊழலுக்கு எதிரான இலங்கையின் சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்துவதுடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை மிகவும் வினைத்திறனாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புடனும் அமுல்படுத்துவதை உறுதிசெய்கிறது. தீவுகள் ஆராயுங்கள்
