Our Feeds


Sunday, October 18, 2026

Zameera

பஸ் கூரையின் மீது உருண்டு வீழ்ந்த பாராங்கல் ; பெண்கள் இருவர் காயம்

 

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் மீது பாராங்கல் ஒன்று உருண்டு விழுந்ததில் பெண்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.


இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்த இரு பெண்களும் சிகிச்சைக்காகப் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »