Our Feeds


Sunday, October 18, 2026

ShortNews

நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிராந்தி ராஜபக்ஷ !


பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு நவலோக  (தனியார்) வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியர்களின் ஆலோசனைக்கமையவே அவரது சுகாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

முன்னதாக கைது செய்யப்பட்ட ஷிராந்தி ராஜபக்ஷ, நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டபோது, அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தேசிய வைத்தியசாலையில் தற்காலிகமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காகவே அவர் இவ்வாறு தனியார் வைத்தியசாலையான நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »