Our Feeds


Monday, October 26, 2026

Zameera

அத்தனகலு - களனி நீர்மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்கை!

 

அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.




இதன்படி, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா-எல, கந்தான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




அதேவேளை, களனி ஆற்றுப் பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்படி, ருவன்வெல்ல, சீத்தாவக்க, தொம்பே, தெஹியோவிட்ட, எஹெலியகொட, யட்டியந்தோட்டை மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.




எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »