Our Feeds


Sunday, October 18, 2026

Zameera

அக்குறணையில் வௌ்ளம் ; கண்டி - மாத்தளை பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு

 


அக்குறணை  நகரில் மீண்டும் வௌ்ளம் ஏற்பட்டதில் கண்டி - மாத்தளை பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (17) போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 


நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக அக்குறணை நகரின் ஊடாகப் பாயும் பிங்கா ஓயா மற்றும் துனுவில வீதி ஊடாகப் பாயும் வஹுகலஓயா போன்ற கிளை நதிகள் பெருக்கெடுத்தன. 


இதன் காரணமாக கண்டி - மாத்தளை பிரதான வீதி மற்றும் துனுவில வீதி போன்றவை முற்றாக வௌ்ளத்தில் மூழ்கின. 


சுமார் 4 முதல் 5 அடி வரை வௌ்ளம் பாய்ந்ததனால் வர்த்தக நிலையங்கள் நூற்றுக்கணக்கில் பாதிக்கப்பட்டன.  


சுமார் ஒரு மணிநேரத்தில் வௌ்ளம் வழிந்தோடிவிட்டபோதும் அப்பகுதிகளில் பலத்த பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. 



அடிக்கடி அக்குறணை நகரம் வௌ்ளத்தில் மூழ்குவது தற்போது வழமையாகிவிட்டதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர். 


நகரின் மத்திய பகுதியின் ஊடாக பாயும் மகாவலியின் கிளை நதிகளுக்கு மிக அண்மித்துள்ள கட்டடங்கள்  அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »