Our Feeds


Friday, October 2, 2026

Zameera

எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணம் அதிகரிக்க முடியாது

 


(இராஜதுரை ஹஷான்)


மாதாந்த எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விலைக்கேற்ப பேருந்து கட்டணங்களை அதிகரிக்க முடியாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


எரிபொருள் நிவாரணத்துக்கு 4100 கோடி ரூபா ஒதுக்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஆனால் எரிபொருள் விலை குறைக்கப்படவில்லை. நிவாரணமும் வழங்கப்படவில்லை என போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினர் அதிருப்தி வெளியிட்டனர்.


மாதாந்த எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கமைய புதன்கிழமை(30)  நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் ஒக்டென் 92 ரக பெற்றோலின் விலை 15 ரூபாவிலும், சுபர் டீசலின் விலை 50 ரூபாவிலும்,ஒடோ டீசலின் விலை 10 ரூபாவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


ஒரு லீற்றர் டீசல் விற்பனையின்போது அரசாங்கத்தால் 70 ரூபா என்ற அடிப்படையில் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.



எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கத்தினர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.


எரிபொருள் நிவாரணத்துக்காக 4100 கோடி ரூபா ஒதுக்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.ஆனால் அந்த நிவாரணம் விலையேற்றத்தின் போது வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. இந்த முறையும் அதிசொகுசு வாகனங்களுக்கு தான் விலையதிகரிப்பு இல்லாமல் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்தார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »