Our Feeds


Friday, October 16, 2026

ShortNews

நாட்டின் முக்கிய மாவட்டங்களில் பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை!



 நாட்டின் பல பாகங்களில் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.


இன்று (16) முற்பகல் 11.30 க்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது, இன்று இரவு 11.30 வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கமைய, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.


எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்களைக் குறைத்துக் கொள்வதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »