அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் போராட்ட முன்னணி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
அரசியலமைப்பின் 120ஆம் உறுப்புரையுடன் வாசிக்கப்படும் 121ஆம் உறுப்புரைக்கு அமைய இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட முன்னணியின் சார்பில் தர்மசிறி லங்காபேலி, புதுது ஜயகொட, வேதிலிங்கம் மகேந்திரன், மரிசா டி சில்வா, ராஜ்குமார் ரஜீவ்காந்த், வசந்த முதலிகே, தயாபால திராணகம மற்றும் டபிள்யூ. வீரசிங்கம் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன் பிரதிவாதியாக சட்ட மா அதிபர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
