Our Feeds


Wednesday, October 21, 2026

ShortNews

சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு!


கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை உயர்வினால் உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதையடுத்தே இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »