மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (20) இரவு 8.20 மணியளவில் மோட்டார் வாகனத்தில் வந்த இருவர், ஹோட்டலில் இருந்த உரிமையாளரை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில் காயமடைந்த அவர், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
