Our Feeds


Thursday, October 22, 2026

SHAHNI RAMEES

பாலியல் தொல்லை குற்றச்சாட்டு: NPP பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

 


இளம் பெண்ணொருவருக்குப் பாலியல் தொல்லை

கொடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.



சந்தேகநபருக்குச் சொந்தமான பிஸ்கட் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொதுஹெர பொலிஸாரால் நேற்று (21) மாலை இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.



கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, இருதரப்பு கருத்துக்களையும் பரிசீலித்த நீதவான் உதும்பரா தசநாயக்க இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.



சந்தேகநபரான தினேஷ் சமந்த குமார என்ற பிரதேச சபை உறுப்பினர், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் பொல்கஹவெல பிரதேச சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொதுஹெர பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »