Our Feeds


Thursday, October 22, 2026

Zameera

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

 

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலான பதிவு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


“உங்கள் வாயைத் திறப்பதற்கு முன் இருமுறை யோசியுங்கள்” (“Think Twice Before You Open Your Mouth”) எனும் வாசகத்துடன் பொலிஸ் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இடுகையொன்று வெளியிடப்பட்டிருந்தது.


இப்பதிவு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டி 'யூத் ஃபார் சேஞ்ச்' (YOUTH FOR CHEnge) அமைப்பு இன்று வியாழக்கிழமை (22) விடுத்துள்ள அறிக்கையில், இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.


அமைப்பின் சர்வதேச விவகாரச் செயலாளர் சக்தி மகாவில, தேசியக் குழு உறுப்பினர் உதார சந்தருவன் மற்றும் கொழும்பு மாவட்டக் குழு உறுப்பினர் டெரன்ஸ் ரொட்ரிகோ ஆகியோர் இணைந்து இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »