தரமற்ற உணவுப் பொருட்களின் விற்பனை மற்றும் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது சுகாதார அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (18) புதன்கிழமை இடம்பெற்ற சபை அமர்விலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் இயங்கும் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
