Our Feeds


Saturday, August 1, 2026

Zameera

மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு


 மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவும், அங்கு நடைபெறும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளைத் தடுத்து நிறுத்தி, ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (31) நடைபெற்றது. 


இதன்போது, மாவட்டத்தில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அத்திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் நிதியொதுக்கீடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. 


மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய பாலங்கள் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாகச் சிறிய பாலங்கள் முதல் பாரிய அளவிலான பாலங்களைப் புனரமைப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. 


பட்டிருப்பு பாலம், மண்டூர் - குறுமண்வெளி பாலம், அம்பிளாந்துறை - குருக்கள்மடம் பாலம், சந்திவெளி - திகிலிவெட்டை பாலம், வெல்லாவெளி - திவுலானை வீதி மற்றும் அம்பிளாந்துறை - வில்லுக்குளம் வீதி ஆகிய திட்டங்களுக்கான சாத்தியவள ஆய்வு அறிக்கைகளை விரைவாகத் தயாரித்து, அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது குறித்து இங்கு வலியுறுத்தப்பட்டது. 


உறுகாமம் மீனவர் சங்கம் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் இறங்குதுறைப் பிரச்சினை தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டன. 


இதன்போது மீனவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, அனைத்து மீனவர்களும் உறுகாமம் குளத்தில் அமைந்துள்ள இறங்குதுறையில் தங்களது தோணிகளை நிறுத்திப் பயன்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 


விவசாயிகளின் நெல் கொள்வனவு, நெல்லுக்கான உத்தரவாதக் கொள்விலை, விவசாயிகளின் நலன் மற்றும் மாவட்ட மக்களின் நீண்டகால அபிவிருத்தித் தேவைகள் ஆகிய அனைத்தும் விரிவாக ஆராயப்பட்டன. இவ்விடயங்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்கள் இனியும் தாமதமின்றிச் செயற்பட்டு, மக்களுக்கு நடைமுறைப்படியான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 


நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு - மாதவனை பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது, மகாவலி அதிகாரசபை ஊடாகக் கால்நடைப் பண்ணையாளர்களுக்குக் காணி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் வழங்கிய உறுதிமொழி குறித்து ஆராயப்பட்டது. அதேவேளை, தற்போது மயிலத்தமடு - மாதவனை பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவருவது குறித்துப் பண்ணையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து, அவ்வாறான அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அங்கிருந்து வெளியேற்றி, கால்நடை பண்ணையாளர்களுக்குக் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. 


குறிப்பாக, வனவளத் திணைக்களத்தினர் இவ்விடயத்தில் பக்கச்சார்பாகச் செயற்படுவதாகவும், பட்டிப்பளை, மயிலத்தமடு போன்ற பகுதிகளில் காடுகளை வெட்டி அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்கும்போது அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், சாதாரண பொதுமக்கள் இவ்வாறு செய்தால் வழக்குத் தாக்கல் செய்வதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பதி சிறிநாத், கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். 


அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வி.நவநீதன், ஆர். நிர்மலராஜ், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள், காவல்துறைத் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

Zameera

ஓகஸ்ட் இறுதிக்குள் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில்


 வரும் வாரங்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.




சீனா மற்றும் பல நாடுகளிலிருந்து பெறப்பட்ட 121 மெட்ரோ பேருந்துகள் தற்போது பதிவு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை நிறைவடைந்தவுடன் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.




மெட்ரோ பேருந்து நிறுவனம் பல புதிய வழித்தடங்களை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானிலிருந்து மேலும் 50 பேருந்துகள் கிடைக்கவுள்ளதால், சேவையை கொழும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை விரிவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் மெட்ரோ பணிமனைகள் அமைக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்காகும் என்றார்.




மேலும், எதிர்கால மெட்ரோ பேருந்துகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயணிகளுக்கான தகவல்கள் வழங்கப்படவுள்ளதுடன், 2030ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ பேருந்துகளின் எண்ணிக்கையை 500க்கும் அதிகமாக 

Friday, July 31, 2026

Zameera

நீரைச் சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்களிடம் கோரிக்கை


 நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறட்சியான வானிலை காரணமாக, இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 


இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்து பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார, தற்போது பல மாவட்டங்களில் கணிசமான நீர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்தார். 


நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவில் தற்போது 40 சதவீதம் மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 


வரவிருக்கும் ஓகஸ்ட் மாதம் மற்றும் தற்போது நிலவும் 'எல் நினோ' நிலைமையினால் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் ஆவியாகி கணிசமான அளவு இழக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய பணிப்பாளர், மீண்டும் மழை பெய்யும் வரை நீர்த்தேக்கங்களில் உள்ள நீரை மிகவும் அவதானமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 


எனவே, நீர் வீணாகாமல் பயன்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் தற்போதைய வறட்சியான வானிலையை வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்றும் சூரியபண்டார மேலும் தெரிவித்தார். 


அங்கு மேலும் கருத்து தெரிவித்த எல்.எஸ். சூரியபண்டார,''இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இந்நாட்களில் வறட்சியான வானிலையையே காண முடிகிறது. நமது நீர்த்தேக்க அமைப்பைக் கருத்திற் கொண்டால், 73 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவில் 40% மட்டுமே தற்போது நம்மிடம் உள்ளது. குறிப்பாக சில மாவட்டங்களில் கணிசமான நீர் பற்றாக்குறை உள்ளது. மீண்டும் மழை கிடைக்கும் வரை, தற்போதுள்ள நீர்த்தேக்கங்களில் உள்ள நீரையும் பெறக்கூடிய நீரையும் அவதானமாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஓகஸ்ட் மாதத்திலும் இந்த எல் நினோ நிலைமையிலும் குறிப்பாக அதிக வெப்பத்துடன் நீர்த்தேக்க நீர் ஆவியாவதால் கணிசமான அளவு இழக்கப்படுகிறது. இதனால் நீரை வீணாக்காமல் பயன்படுத்துவதற்குத் தேவையான உதவியை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம், எப்போதும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் நம்மால் இவ்வாறான நிலைமையைச் சமாளிக்க முடியும்.'' என்றார். 


இதற்கிடையில், எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் எல் நினோ வானிலை நிலவரத்தை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்குத் தேவையான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு முடிவடைந்துள்ளதாக நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார். 


எல் நினோ நிலைமை என்பது மழைவீழ்ச்சி முற்றாக இல்லாது போவது அல்ல, மழைவீழ்ச்சி அமைப்பில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றமே என அவர் சுட்டிக்காட்டினார். 


இருப்பினும், இந்த நிலைமையினால் சூழலின் வெப்பநிலை அதிகரிப்பதுடன், இதன் காரணமாக நீர் ஆவியாதல் அதிகரிக்கும் என நிலந்த தனபால சுட்டிக்காட்டுகிறார். 


இந்த வெப்பநிலை உயர்வின் காரணமாகவே நீர் முகாமையின் அவசியம் ஏற்படுவதாக அவர் வலியுறுத்தினார். தற்போது சிறுபோகச் செய்கை முடிவடைந்து வருவதால், வரவிருக்கும் பெரும்பாகச் செய்கை நடவடிக்கைகளை ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதிக்கும் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானித்துள்ளதாக அவர் இங்கு தெரிவித்தார். 


இதன் காரணமாக, உரிய பகுதிகள், வலயங்கள் அல்லது நீர்ப்பாசன அமைப்புகளின் மட்டத்தில் அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். 


இவ்வாறு ஒரே நேரத்தில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதன் மூலம் பெருமளவு நீரைச் சேமிக்க முடியும் என்றும், அதற்கு மேலதிகமாக மின்சாரம் மற்றும் குடிநீரையும் வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்கால நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் நிலந்த தனபால மேலும் தெரிவித்தார். 


அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ''எல் நினோ நிலைமை என்பது உண்மையில் மழை இல்லாது போவது அல்ல, ஏதோவொரு மழைவீழ்ச்சி மாற்றம் மட்டுமே ஏற்படுகிறது. எனவே நாம் அந்த மழைவீழ்ச்சியையும் கணித்து, வரும் காலத்தில் எவ்வாறு முகாமை செய்வது குறித்து ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம். வழக்கமாக எல் நினோ நிலைமையினால் பெரிய பாதிப்போ, பெரிய மாற்றமோ ஏற்படுவதில்லை. ஆனால் வெப்பநிலை அதிகரிக்கும். வெப்பநிலை அதிகரிப்பதால் ஆவியாதல் அதிகரிக்கும். அதனால் தான் நமக்கு இந்த முகாமையின் தேவை ஏற்படுகிறது. ஆனால் மழைவீழ்ச்சி அமைப்பில் பெரிய மாற்றம் ஏற்படாது. எனவே நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நாம் இப்போது சிறுபோகத்தின் இறுதியில் இருக்கிறோம். ஆனால் நாம் அடுத்து ஆரம்பிக்க இருப்பது பெரும்பாகச் செய்கை. நாம் இப்போது அரசாங்கமாக அனைவரும் கலந்துரையாடி ஒக்டோபர் 01 முதல் 15 வரை போகத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம். எனவே நமது விவசாயிகளிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், வரவிருக்கும் பெரும்பாகச் செய்கையை ஒக்டோபர் 01 முதல் 15 க்குள் ஆரம்பிப்பது மற்றும் நிச்சயமாக ஒரு பகுதியையோ, ஒரு அமைப்பையோ அல்லது ஒரு பிராந்தியத்தையோ எடுத்துக்கொண்டால் கட்டாயமாக ஒரே நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும். ஒரே நேரத்தில் ஆரம்பித்தால் நம்மால் கணிசமான நீரைச் சேமிக்க முடியும். அதேபோல் மின்சாரம் மற்றும் குடிநீரை வீணாக்காமல் சேமிக்க முடிந்தால், நம்மால் இந்த எல் நினோ நிலைமையை நன்றாக எதிர்கொள்ள முடியும்.'' என்றார்.

Zameera

கிழக்கு மாகாணம் உட்பட 5 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை




 நாட்டின் சில பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கை விடுத்துள்ளது. பகல் நேரங்களில் வெப்பக் குறியீடு (Heat Index) "எச்சரிக்கை நிலை" (Caution Level) வரை உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களுக்கு பொருந்தும்.

மனித உடல் உணரும் வெப்பநிலையைக் குறிக்கும் வெப்பக் குறியீடு சில பகுதிகளில் எச்சரிக்கை நிலையை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHAHNI RAMEES

ஹேமசிரி பெர்னாண்டோவுக்கும் மரண தண்டனை!

 



2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள்

SHAHNI RAMEES

BREAKING: முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிப்பு!


முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு

SHAHNI RAMEES

ஓகஸ்ட் மாதத்தில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!

 


மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய

SHAHNI RAMEES

பாராளுமன்றம் ஓகஸ்ட் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடும்...

 

பாராளுமன்றம் எதிர்வரும் ஓகஸ்ட் 04ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை
SHAHNI RAMEES

"Weaponsஐ ஒப்படைக்கிறோம்” - Hamas முடிவால் குஷியான Trump!

 


ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கான

SHAHNI RAMEES

லிந்துலையில் குளவி கொட்டுக்கு உள்ளாகி ஒருவர் பலி - ஐவர் வைத்தியசாலையில்....

 


லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாமஸ்டன்

Zameera

வணிக இரகசியங்களை கசியவிட்ட ஊழியருக்கு 50 மில்லியன் ரூபா நட்டஈடு


 கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான "உற்பத்தி இரகசியங்கள்" மற்றும் "வணிக இரகசியங்களை" நிதி இலாபத்திற்காக வேறு நிறுவனத்திற்கு வெளிப்படுத்திய ஊழியர் ஒருவருக்கு, அந்நிறுவனத்திற்கு 50 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகளான ஜனக் டி சில்வா, சம்பத் விஜேரத்ன ஆகியோரின் உடன்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள கையுறை உற்பத்தி தனியார் நிறுவனம் ஒன்றின் "உற்பத்தி இரகசியங்கள்" மற்றும் "வணிக இரகசியங்களை" நிதி இலாபத்திற்காக இரகசியமாக வேறு நிறுவனத்திற்கு வெளிப்படுத்தியமை தொடர்பில், அதன் ஊழியர் ஒருவருக்கு எதிராக அந்நிறுவனம் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் அந்நிறுவனத்தில் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றியவராவார்.

இறப்பர் பாலைப் பயன்படுத்தி "தொழில்துறை கையுறைகளை" உற்பத்தி செய்யும் தமது நிறுவனம், அச்செயல்முறைக்குரிய தொழில்நுட்பம் மற்றும் இரகசியக் விடயங்கள் தொடர்பில் காப்புரிமையையும் பெற்றுள்ளதாகப் முறைப்பாட்டாளரான நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிராளி திறமையான மற்றும் நம்பிக்கையான ஊழியராகச் செயற்பட்டதால், அத்தொழில்நுட்ப மற்றும் வணிக இரகசியங்கள் குறித்த பயிற்சியும் அவருக்கு வழங்கப்பட்டிருந்ததாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பணியாற்றிய எதிராளி, 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் திகதியோ அல்லது அதற்கு அருகாமையிலுள்ள நாளிலோ எவ்வித அறிவிப்புமின்றிப் பணியிலிருந்து விலகியதாகவும், அதே ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி அதனை அறிவித்துக் கடிதம் அனுப்பியதாகவும் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தமது நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் அவர் கொரிய கையுறை உற்பத்தி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து செயற்பட்டுள்ளதாகவும், தமது நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வணிக இரகசியங்களை நிதி நன்மைகளுக்காக அந்த நிறுவனத்திற்கு எதிராளி வெளிப்படுத்தியுள்ளார் என்றும் முறைப்பாட்டாளர் நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

எனினும், வர்த்தக மேல் நீதிமன்றத்தில் தனது தற்காப்பு வாதத்தைச் சமர்ப்பித்த எதிராளி, முறைப்பாட்டாளர் நிறுவனத்தின் உற்பத்தி அல்லது வணிக இரகசியங்கள் எதுவும் தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும், தனது கல்வித் தகுதி மற்றும் பதவிக்கு அமைய இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயல்முறைகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ தனக்குத் திறன் இருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்நிறுவனத்தின் எந்தவொரு இரகசியத் தகவலையும், வணிக அல்லது உற்பத்தி தொழில்நுட்ப இரகசியங்களையும் தான் மூன்றாம் தரப்பினருக்கு வழங்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, கையுறை உற்பத்தி இரகசியங்கள் மற்றும் வணிக இரகசியங்கள் எதிராளிக்கு வழங்கப்பட்டிருந்தன என்பதை நிரூபிக்க முறைப்பாட்டாளர் நிறுவனம் தவறிவிட்டது என கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

எதிராளியின் கல்விப் பின்னணியைக் கருத்தில் கொள்ளும்போது, இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பம், அறிவு மற்றும் வணிக இரகசியங்களைப் புரிந்துகொள்ளவோ அல்லது வேறு தரப்பினருக்கு வழங்கவோ அவருக்கு இயலுமை இல்லை என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், வர்த்தக மேல் நீதிமன்றத் தீர்ப்பில் திருப்தியடையாத முறைப்பாட்டாளர் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதனை விசாரணை செய்த பின்னர், நீதிபதிகளான ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோரின் உடன்பாட்டுடன் தமது தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன:

"வர்த்தக மேல் நீதிமன்ற விசாரணையில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களை மேல் நீதிமன்ற நீதிபதி சரிவர பகுப்பாய்வு செய்யவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம், எதிராளி பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அந்நிறுவனத்தின் உற்பத்தி, வணிக இரகசியங்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தகவல்களை நிதி நன்மைக்காக மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தியுள்ளார் என்பது உறுதி செய்யப்படுகிறது. அதற்கமைய, மனுதாரர் நிறுவனத்திற்குரிய காப்புரிமையின் படி இவ்வாறான உணர்வுப்பூர்வமான தகவல்களை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதையோ அல்லது சுரண்டுவதையோ தடுத்து எதிராளிக்கு எதிராகத் தடையுத்தரவு பிறப்பிக்கத் தீர்மானிக்கிறேன்," என உத்தரவிட்டார்.

மேல்முறையீட்டாளர் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 50 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்படுவதாகவும், அதற்கமைய எதிராளி 50 மில்லியன் ரூபாய் தொகையையும் வழக்குக் கட்டணத்தையும் மேல்முறையீட்டாளர் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, 2019.03.29 அன்று கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zameera

மண்மேடு சரிந்து தொழிலாளி காயம்


 கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் வீதிச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர் இன்று (31) நண்பகல் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் ஹேவாஹெட்ட, முல்ஓய பகுதியை சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, சுமார் 20 அடி உயரமுள்ள மண்மேடு எதிர்பாராதவிதமாக இவர் மீது சரிந்து விழுந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.\

விபத்தைத் தொடர்ந்து உடனடியாகச் செயற்பட்ட பிரதேசவாசிகளும் சக ஊழியர்களும் மண்ணுக்குள் சிக்கியிருந்த அவரை மீட்டு கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதித்த சமயத்திலும் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பிரதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHAHNI RAMEES

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்!

 

மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன புதிய