Our Feeds


Saturday, October 31, 2026

Zameera

மைலத்தமடு மேச்சல்தரை பகுதியிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் - ஸ்ரீநேசன் எம்பி

 

சட்டத்தின் படியாக எல்லாம் நடைபெறும் நீதிமன்றை தீர்ப்பை மீறி எதுவும் நடைபெறாது என்று ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் தெரிவித்து இருக்கின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆகவே சட்டவிரோதமாக குடியேறிய மயிலத்தமடு, மாதவனை பகுதியிலிருக்கின்றவர்களை நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அவர்களை மேச்சல்தரை பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதான் எமது கொரிக்கையாகும்.


என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு செட்டிபாளையத்தில்  வெள்ளிக்கிழமை(30) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…


மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு மாதவனை ஆகிய மேச்சர்தரைப் பிரதேசத்தில் யுத்தத்துக்கு பின்னர் 2012 ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் அம்பாறை மட்டும் பொலன்நறுவை மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் பயிர்ச்செய்கை என்ற போர்வையில் மேச்சல் தரைகளில் கால்நடைகளை பராமரிக்க முடியாத அளவிற்கு அத்துமீறிய வேலைகளை செய்து வருகின்றார்கள்.



அவர்கள் கால்நடைகளை சுடுவது வெட்டுவது காயப்படுத்துவது பண்ணையாளர்களை கடத்திச் செல்வது அச்சுறுத்துவது போன்ற  செயபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.


அண்மையில் கால்நடை பண்ணையாளர் ஒருவர் இவ்வாறு கடத்தப்பட்டு பின்னர் மிகுந்த பிரியத்தின் மத்தியில் அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார். இவ்வாறு சட்டவிரோதமாக மேச்சல் தரைகளை பிடித்துள்ளவர்கள் ஆட்களை கடத்துகின்ற வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள்.


மேய்ச்சல்தரை விடயத்தில் ஒரு இன முருறுனை ஏற்படுத்துகின்ற விதத்தில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.


பண்ணையாளர்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களை செய்கின்ற பொழுது அவர்களை நாம் சமாதானப்படுத்த முடிகின்றோமே தவிர மாறாக நிரந்தரமாக அத்துமீறி குடியேறியுள்ளவர்களை அங்கிருந்து அகற்ற முடியாமல் உள்ளது.


ஏறாவூர் நீதின்றம் அங்கிருந்து சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை அகற்றுமாறு கூறியிருக்கின்றது. சட்டவிரோதமாக பயிர்செய்பவர்களை அவர்களுடைய பயிற்சிக்கு காலம் முடிவுற்றதும் அங்கிருந்து வெளியேற்றி விட வேண்டும் என கொழும்பு நீதி மேல் நீதிமன்றமும் தெரிவித்திருந்தது.


எனவே நீதிமன்றங்களின் தீர்ப்பையும் மீறி இன்னும் தொடர்ச்சியான செயற்பாடுகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எனவே நாம் கேட்பதெல்லாம் நீதிமன்றங்களின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுவே.


நாம் பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியிடத்திலும் நீதிமன்றத்திலும் ஊடகங்கள் வாயிலாகவும்; இந்த விடயங்களை எடுத்துரைத்துள்ளோம்.


சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, ஊடகத்துறைக்குமாக இந்த விடயத்தை பொறுப்புள்ள நான்கு துறைகளிடமும் நாங்கள் ஜனநாயக அடிப்படையில் இந்த சட்ட விரோதிகளை வெளியேற்றுமாறு தெரிவித்தும்கூட அந்தவிடயங்கள் நடைபெற்று இருக்கவில்லை இது எவ்வாறு அமைந்தாலும் இப்போது இருக்கின்ற அரசாங்கத்திடம் நாங்கள் கேட்கின்ற விடயம் நீதிமன்ற தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் நாங்கள் கூறுகின்றோம். அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக ஒரு சுமுகமான நிலைமை ஏற்படும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


காடுகளை அழிக்கின்றார்கள், நெருப்பு வைக்கின்றார்கள், இவ்வாறு செய்து கால்நடைகளுக்கு உணவில்லாமல் நிலைமையை ஏற்படுத்தி வாழ்வாரத்தை இல்லாமல் செய்கின்றார்கள்.



எனவே பண்ணையாளர்கள், விவசாயிகள் என பலரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மட்டக்களப்பு கச்சேரி முன்பாக எதிர் வருகின்ற 2026.11.02 ஆம் திகதி காலையில் மட்டக்களப்பு கச்சேரி முன்பாக ஒரு சாத்வீகப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில் அனைவiயும் பங்கேற்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.


எனவே ஜனாதிபதி அவர்கள், அமைச்சர்கள், பொறுப்பு வாய்ந்தவர்கள், அனைவரும் தலையீடு செய்து இதற்குரிய தீர்வினை காணவேண்டும் இந்த தீர்வு இல்லாத விட்டால் அரசாங்கத்திற்கும் எமக்குமான இடைவெளி மிகவும் அதிகரித்துச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது.


சட்டத்தின் படியாக எல்லாம் நடைபெறும் நீதிமன்றை தீர்ப்பை மீறி எதுவும் நடைபெறாது என்று ஜனாதிபதி ஞானசார தேரர் விடயத்தில் தெரிவித்து இருக்கின்றார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆகவே சட்டவிரோதமாக குடியேறிய மயிலத்தமடு, மாதவனை பகுதியிலிருக்கின்றவர்களை நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அவர்களை மேச்சல்தரை பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதான் எமது கொரிக்கையாகும் என அவர் இன்போது தெரிவித்தார்.

Zameera

வட்ஸ்அப் குழு ஊடாக நிதி மோசடி – ஒருவர் கைது

 

பெறுமதியான பரிசுப் பொதியொன்றை வழங்குவதாகக் கூறி, வட்ஸ்அப் குழுவின் ஊடாக 14 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




இது தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.




இதன்போது, குறித்த பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை வைப்பிலிடச் செய்து, அதனை மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.




இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


SHAHNI RAMEES

அக்குறணை பிரதேச சபையின் சேவைக்கு தேசிய அங்கீகாரம்!

 


அக்குறணை பிரதேச சபையின்  சேவைக்கு தேசிய அங்கீகாரம்!

Friday, October 30, 2026

ShortNews

இஸ்ரேலிய அரபு மக்களுக்கு எனது சலாம் - த.மு.கூ தலைவர் மனோ கணேசன் எம்.பி!


இஸ்ரேலில் வாழும் அரபு உடன்பிறப்புகளுக்கு சலாம்..! - 

அரபு இஸ்ரேல் வாக்காளர்கள், இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு முன்மாதிரி..!
-மனோ கணேசன்

இலங்கையில், நண்பர் அனுர திசாநாயக்க தெரிவு செய்யபட்டது,  ஜனாதிபதி தேர்தலில் ஆகும்.

ஆனால் நமது மக்கள் அலையில் அள்ளுண்டு வாக்களித்தது, பாராளுமன்ற தேர்தலில் ஆகும்.

இவர்களுக்கு தான் இன்று இஸ்ரேலில் வாழும் அரபு உடன் பிறப்புகள் எப்படி வாக்களிக்க வேண்டும் என பாடம் புகட்டி உள்ளார்கள்.

ஆகவே, இஸ்ரேலிய அரபு மக்களுக்கு எனது சலாம் என தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை பற்றி கருத்து கூறியுள்ள மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது;  

அராபிய தலைமையில் செயல்படும் இரு  அரபு - இஸ்ரேலிய கட்சிகள் (Hadash–Ta’al–Balad, Ra’am-United Arab List) தலா, 11, 8, என மொத்தம் 19 ஆசனங்களை பெற்று தம்மை பேரம்  பேசும் தரப்பாக நிலை நிறுத்தி உள்ளன.

இஸ்ரேலில் ஜனாதிபதி ஆட்சி கிடையாது. பாராளுமன்ற பிரதமர்,  அமைச்சரவை, ஆட்சிதான். 

இலங்கையில், ஜனாதிபதியாக நண்பர் அனுர தெரிவானது,  ஜனாதிபதி தேர்தலில் ஆகும். 

அந்த தேர்தல் நடந்து முடிந்த பின், பாராளுமன்ற தேர்தலில், யாரோ, எவரோ, கூவியதை கேட்டு, அலையில் அள்ளுண்டு போய்,  இலங்கை தமிழ் பேசும் வாக்காளர்கள் வாக்களித்தார்கள்.

இன்று மாவட்டங்களில்,  அமைச்சர்களின், மந்திரிகளின், முகங்கள், பெயர்கள், தெரியாது. விலாசங்கள், தொலைபேசி எண்கள், தெரியாது. 

இப்படி, பாராளுமன்ற தேர்தலில்  வாக்களித்த இலங்கை தமிழ் பேசும் சிறுபான்மை  மக்களுக்கு தான், இஸ்ரேலிய பாராளுமன்ற தேர்தலில் வாக்களித்த,  இஸ்ரேலிய அரபு சிறுபான்மை மக்கள் பாடம் படிபித்து உள்ளார்கள் என்று நான் திடமாக கூறுகிறேன். 

சிந்திக்க தெரிந்த அறிவுள்ளவர்களுக்கு, நான் கூறுவதன் முழு அர்த்தம் விளங்க வேண்டும்.

Zameera

நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டவுடன் அதைத் திரும்பப் பெற முடியாது சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான பிமலின் கூற்றுக்கு அஜித்தின் பதில்

 

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டவுடன் அதைத் திரும்பப் பெற முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.


 


சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் 03ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


 


சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 50 குற்றச்சாட்டுகளும் மிகவும் கடுமையானவை எனக் குறிப்பிட்ட அவர், அவை கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


 


பின்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகம், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ள விடயங்கள் மற்றும் அதன் நடைமுறைசார்  விடயங்கள் குறித்துத் திருப்தியடைந்து அதனை நிகழ்ச்சி நிரலில் (Order Paper) சேர்த்து வெளியிட்டதாகவும் உறுப்பினர் இங்கு குறிப்பிட்டார்.


 


அதன்படி, நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட எந்தவொரு பிரேரணையையும் பின்னர் திரும்பப் பெற முடியாது எனத் தெரிவித்த அவர், அதனைத் திரும்பப் பெற வேண்டுமென்றால் அனைத்து உறுப்பினர்களும் அதனை வாபஸ் பெற வேண்டும் அல்லது பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றின் மூலம் மட்டுமே அதனை நீக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.


 


இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்தி அவர்,


"இந்தச் சபாநாயகருக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 50 குற்றச்சாட்டுகளும் மிகவும் கடுமையானவை. ஒருபுறம் ஊழல், மறுபுறம் நடைமுறைசார் பிழைகள், மற்றும் நியாயமற்ற பாராளுமன்ற பாரம்பரியத்திற்கு எதிரான முறையற்ற நடவடிக்கைகள் என இவை அனைத்தும் இந்த 50 குற்றச்சாட்டுகளிலும் அடங்கியுள்ளன. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாங்கள் கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் இதன் உள்ளடக்கங்கள் மற்றும் நடைமுறைசார் விடயங்கள் குறித்துத் திருப்தியடைந்து, அதனைப் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் வெளியிட்டு உறுதிப்படுத்தினார். அப்படியானால், பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்ட எந்தவொரு பிரேரிப்பையும் மீண்டும் திரும்பப் பெற முடியாது. அனைத்து உறுப்பினர்களும் அதனை வாபஸ் பெற்றாலோ அல்லது பாராளுமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலோ மட்டுமே அது சாத்தியமாகும். எனவே, பாராளுமன்ற நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு வேண்டியபடி நடந்தாலும், அரசாங்கம் விரும்பியவாறு ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளை நிராகரிக்க முடியாது. நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டதென்றால் அது சேர்க்கப்பட்டதே, அதனை மாற்ற முடியாது...


 


என்ன காரணங்களுக்காக இந்த எதிர்ப்பை அரசாங்கம் முன்வைக்கிறது? சபாநாயகருக்கு எதிரான இந்தப் பிரேரணை குறித்து, ஒருபுறம் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு முறையான விசாரணையை ஆரம்பித்து ஆழமாக முன்னெடுத்து வருகிறது என்பது அனைவருக்கும் தெளிவானது. சபாநாயகரின் சொந்த உத்தரவின் பேரில் பாராளுமன்ற அதிகாரிகளே இதுகுறித்து விசாரணை நடத்தி, இந்தக் 50 குற்றச்சாட்டுகளில் சுமார் 30 குற்றச்சாட்டுகளுக்குச் சாட்சியங்களைக் கண்டறிந்துள்ளனர். அது தொடர்பான அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவை எழுத்துப்பூர்வ சாட்சியங்களாக மாறியுள்ளன. இத்தகையதொரு சூழலில், சபாநாயகரின் நிரபராதித் தன்மையைக் குறித்துப் பேசுவதற்குச் சபை முதல்வரைத் தவிர வேறு யாருமில்லை. சபாநாயகர் இந்தட்டுக் குற்றச்சாட்டுகளில் நிரபராதி என்றோ அல்லது குற்றச்சாட்டுகள் தவறு என்றோ சபை முதல்வர்கூடக் கூறுவதில்லை. மாறாக, இந்தக் குற்றச்சாட்டுகளில் ஆபாசமான விடயங்கள் அடங்கியுள்ளதாகவே சபாநாயகர் கூறுகிறார். அதுமட்டுமின்றி, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தல், நியாயமற்ற முறையில் செயற்படுதல், பாராளுமன்ற பாரம்பரியத்தைப் பொருட்படுத்தாமல் இருத்தல், நிலையியல் கட்டளைகள் மற்றும் அரசியலமைப்பிற்கு முரணாகச் செயற்படுதல் ஆகியவை குறித்து மிகவும் விரிவான மற்றும் முறையான குற்றச்சாட்டுகளை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம்.


 


அவ்வாறெனில், இத்தகைய சந்தர்ப்பத்தில் சட்டக் விடயங்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் எழுமானால் நமது பாரம்பரியம் என்ன? நாட்டின் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெறுவதாகும். இதற்கு முன்னரும் கூட பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் சட்டரீதியான சில விடயங்கள் குறித்துச் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை பெற்றுள்ளது. இந்த 10ஆவது பாராளுமன்றத்தில்கூட நாங்கள் அவ்வாறு ஆலோசனை பெற்றுள்ளோம்... ஆனால் இன்றுவரை இதுகுறித்துச் சட்ட மா அதிபரிடம் வினவப்படவில்லை." என்றார்.

Zameera

ரகித்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள், சொகுசு கார்கள் முடக்கம்!

 

(நமது நிருபர்) 


தற்போது வெலிசர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் காரரும் பாதாள குழு தலைவர் எனவும் அறியப்படும் நதுன் சிந்தக்க விக்ரமரத்ன எனும் ஹரக் கட்டாவின்  மனைவியிடமிருந்து 12 கோடி ரூபா பணத்தை  இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷவின் மகன் ரகித்த ராஜபக்‌ஷவுக்குச் சொந்தமான 4 வங்கிச் கணக்குகளுக்கு  மேலதிகமாக  இரு  சொகுசு கார்களையும்  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு முடக்கியுள்ளது.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹரக் கட்டாவை அங்கிருந்து விடுவித்து, பாதுகாப்பான சிறைச்சாலையொன்றிற்கு மாற்றுவதற்காக அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபா பணத்தை  இலஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ரகித்த ராஜபக்‌ஷஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


பின்னர், கொழும்பு நீதி்வான் நீதிமன்றத்தால் இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டபோதிலும்,  சந்தேகநபரால் பெறப்பட்டதாகக் கூறப்படும் 12 கோடி ரூபா இலஞ்சப் பணத்தைக் கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது.பயண வழிகாட்டி



இதனை அடுத்து,   குற்றச்செயலின் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் அவர்களின் சொத்துக்கள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்தது.


இந்த விசாரணைகளின் அடிப்படையில், ரகித்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான 4 வங்கிச் கணக்குகள் மற்றும் 2 அதிநவீன சொகுசு  கார்களை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். முடக்கப்பட்ட வங்கிச் கணக்குகளில் சுமார் 4 கோடி ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.


மேற்படி சொத்துகள் முடக்கப்பட்டமை தொடர்பான எழுத்து மூல அறிவிப்பை வழங்குவதற்காக புலனாய்வு அதிகாரிகள்  இராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள ரகித்த ராஜபக்ஷவின்  வீட்டிற்கு சென்றபோதிலும், அவர் வீட்டில் இல்லாத காரணத்தால், குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தல் அவரது மனைவியிடம் வழங்கப்பட்டதாக  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


 

Zameera

ஒக்டோபரில் முதன்மைப் பணவீக்கம் 8.8 சதவீதமாக அதிகரிப்பு

 

செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒக்டோபர் மாதத்தில் முதன்மைப் பணவீக்கம் 8.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் தெரிவித்துள்ளது


அதேவேளை, ஒக்டோபர் மாதத்தில் உணவுப் பணவீக்கம் மற்றும் உணவல்லாப் பணவீக்கம் ஆகிய இரண்டும் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Zameera

தற்போதைய அரசும் அடக்குமுறையை தேர்ந்தெடுத்துள்ளது: முஜிபுர் ரஹ்மான்

 

(செ.கவிஷனா)



கடந்த கால ஆட்சியாளர்கள் போன்று சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் தற்போதைய அரசாங்கமும் அடக்குமுறையை தேர்ந்தெடுத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


கொழும்பில் வெள்ளிக்கிழமை (30) ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளமையால் நாட்டின் பொருளாதார நெருக்கடியும் பொருமக்களின் மீதான சுமைகள் தொடர்ச்சியான சுமத்தப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக பணவீக்கமும் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.


இதற்கிணங்க எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களின் விலையிலும் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும்.  



இவ்வாறு பொருட்களின் விலை அதிகரிக்கும் வேளையில் அஸ்வெசும நலன்புரி உதவிகளை பெற்றுவந்த இலட்சக்கணக்காண மக்களை அரசாங்கம் அந்நலன்புரி பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் வறுமை அதிகரித்துள்ள சூழலில் அஸ்ஙவெசும பயனாளிகளின் எண்ணிக்கையை எவ்வாறு இவ்வளவு பெருமளவில் குறைத்தது.


அரசாங்கத்தின் சமூகப் பொருளாதார திட்டங்களால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்காத நிலையில் விலை அதிகரிப்பு மற்றும் உரிமைக்காக மக்கள் எதிர்வரும் மாதங்களில் வீதிக்கும் இறங்கிப் போராடுவார்கள் என்பதை உணர்ந்தே அரசாங்கம் அடக்கு முறையைக் கையில் எடுத்துள்ளது.


மக்கள் மத்தியில் எழும் கடுமையாக எதிர்பபை அடக்குவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச்சட்ட மூலம் மற்றும் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் போன்ற மனித உரிமைகளுக்கு எதிரான ஆபத்தான சட்டமூலங்களை கொண்டுவர முயற்சிக்கிறது.


சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத ஆட்சியாளர்கள் தங்களது இயலாமையை மறைப்பதற்காக வரலாற்கு ரீதியாகப் பயன்படுத்தும் அடக்குமுறை வழியையே தற்போதைய அரசாங்கமும் தேர்ந்தெடுத்துள்ளது.  


அத்துடன் தொழில்சார் உரிமைகளுக்காக போராடும் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் கூட இந்த புதிய சட்டமூலங்களின் கீழ் பயங்கரவாதம் என வரையறுக்கப்பட்டுள்ளதால் தொழிற்சங்கள் அச்சமடைந்துள்ளன. இச்சட்டமூலங்கள் தொழிற்சங்களுக்கு மட்டுமன்றி ஊடகவியலாளர்கள் உட்பட நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அச்சுறுத்தலாகவும் அடக்குமுறையாகவும் அமையும் என்றார். 

Zameera

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 3 ஊழியர்கள் படுகாயம்

 

(நமது நிருபர்)



துறைமுக நிலையம் ஒன்றிலிருந்து ஏலத்தில் வாங்கப்பட்ட எரிபொருள் தாங்கியை வெட்டித் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சம்பவமானது பாதுக்கை- மீபே பகுதியில் (30) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


தொழிற்சாலையில் மசகு எண்ணெய் சேமிப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் பயன்படுத்தப்பட்டு பின்னர் ஏலத்தில் எடுக்கப்பட்ட குறித்த தாங்கியை அதற்குள் எஞ்சியிருந்த எரிபொருளை வெளியேற்றாமல் எரிவாயு மூலம் வெட்டித் தயாரித்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இந்த வெடிப்பச் சம்பவத்தின் காரணமாக அருகில் இருந்த வீடு ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளது.


விபத்தில் இரண்டு ஆண் ஊழியர்கள் காயமடைந்ததோடு வெடிப்பு நிகழ்ந்த போது தலைமீது ஓடு விழுந்ததில் பெண் ஊழியர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

SHAHNI RAMEES

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் நவம்பர் 3 இல் இல்லை!

 


சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால்

SHAHNI RAMEES

பைனான்ஸ் தளத்தில் $6.3 பில்லியன் கிரிப்டோ திருட்டு!

 


உலகிலேயே மிகப்பெரிய கிரிப்டோகரன்சி

Zameera

வலி. வடக்கில் காணி விடுவிப்பைக் கோரி 28ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்

 

(எம்.நியூட்டன்)


வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்று (30) வெள்ளிக்கிழமை  28ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். 


வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.


யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் ,  அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது. 


இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், 28ஆவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னடுத்தனர்.

SHAHNI RAMEES

குமார் சங்கக்காரவின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த ரயான் எயார் நிறுவனம்!


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும்