ராஜகிரியவில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் அவருக்கு பிணை வழங்க உத்தரவிட்டார்.
நீதிமன்ற வளாகத்தில் சம்பிக்கவின் ஆதரவாளர்கள் கூடி அவரை வரவேற்க காத்திருப்பதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
