Our Feeds


Monday, February 24, 2020

www.shortnews.lk

ஐ.தே.க வை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவதற்காகத் தான் 04/21 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா? சந்தேகிக்கிறார் முஜிபுர் ரஹ்மான் MP

 


ஐ.தே.க வை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றுவதற்காகத் தான் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் நடத்தப்பட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னனியின் தவிசாளராக முன்னால் ஜனாதிபதி மைத்திரியை நியமித்திருப்பதின் மூலம் இந்த சந்தேகம் மேலும் வலுக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

குண்டுத் தாக்குதல் தொடர்பில் முன்னால் பாதுகாப்பு செயலாளர் ஹேமஸ்ரீ பெர்ணான்டோவிடம் நடத்தப்பட்ட விசாரனைகளில் நாட்டில் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்ததை தான் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிக்கு தெரிவித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். 

இப்படி தாக்குதலுக்கு முன்னரே தகவல் கிடைத்தும் அது பற்றி கவனமெடுக்காமல் இருந்தது ஏன்? என முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »