Our Feeds


Monday, February 24, 2020

www.shortnews.lk

இந்த அரசுக்கு இனவாதத்திற்கு அப்பால் செயல்பட முடியாது - இம்ரான் MP

 


சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வழங்குவதாக அறிவித்து விட்டு அதனை இரத்து செய்த இந்த அரசின் செயல்பாடுகள் இவர்களினால் இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் செயல்பட முடியாது என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. இப்படியான செயல்பாடுகளை கொண்ட இந்த அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையோ அல்லது ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையோ கிடைத்தால் சிறுபான்மை மக்களுக்கு என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் புதிதாக எமது ஐ.தே.க அரசு 06 சபைகளை உருவாக்கிக் கொடுத்தது அதற்கெதிராக எமது அரசாங்கத்திற்கும் இனவாத அழுத்தங்கள் வந்தன ஆனால் நாம் அதனை ரத்து செய்யவில்லை.

எமது அரசு சாய்ந்தமருது விடயத்தில் சரியாக நடந்து கொள்ள வில்லை என்பதே எமது நிலைபாடாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »