அகில இலங்கை மக்கள் காங்கிரஸை தனித்து போட்டியிட வேண்டாம் எனவும் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுமாறும் சஜித் பிரேமதாச என்னிடம் தெரிவித்தார்.
இருப்பினும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் அதிகரித்துக் கொள்ளும் வகையில் சில இடங்களில் நாங்கள் தனித்தும், சில இடங்களில் சஜித் தலைமையிலான கூட்டணியுடன் இணைந்தும் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
ஆனால் என்னையும் எனது கட்சியையும் எப்படியாவது அழித்துவிட நினைக்கின்ற இனவாத ஊடகங்கள் எனது கட்சியை தனித்து போட்டியிடுமாறு சஜித் பிரேமதாச கூறியுள்ளதாக பொய்யான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகின்றன என அ.இ.ம.க தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார்.
