உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான அரசாங்கத்தின் விசாரனைகளில் தமக்கு திருப்தியில்லை எனவும், இதுவரை வெளியிடப்பட்டுள்ள புலனாய்வு தகவல்கள் மக்களுக்கு உண்மைகளை மறைப்பதாக தாம் சந்தேகப்படுவதாகவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சிலர் நீதி மன்றத்தின் மூலம் மீண்டும் மீண்டும் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர் இது எமக்கு போதுமானதாக இல்லை. தாக்குதலுடன் தொடர்பானவர்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை அறியப்பட வேண்டும்.
தாக்குதலுடன் தொடர்பானவர்கள் அதன் பின்னணியை மூடி மறைக்க முற்படுகின்றனர். இதனை வேறு நபர்கள் மீது சுமத்த முனைகின்றனர். ஆகவே முழுமையாக இச்சம்பவம் ஆராயப்பட வேண்டும் என கர்த்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.
