Our Feeds


Thursday, February 20, 2020

www.shortnews.lk

சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வழங்கப்பட்டமை தொடர்பில் எனக்கு தெரியாது - அமைச்சர் ஜனக பண்டார

 


சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வழங்கியது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசப்பட்ட நிலையில் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொது நிர்வாக சேவைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இதன் போது தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை வழங்கப்பட்டமை பெரும் சர்சையை உண்டாக்கியுள்ளதாக இதன் போது அமைச்சர் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரம் மற்றும் சாய்ந்தமருது நகர சபை விவகாரம் ஆகியவற்றை சேர்த்து தீர்வு கண்டு ஒரே வர்த்தமானியில் வெளியிட்டிருந்தால் இனங்களுக்கு இடையில் பிரச்சினைகள் எழுந்திருக்காது என இதன் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனிடம் இது தொடர்பில் அமைச்சர்கள் வினவிய போது இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் தாம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் பதிலளித்தார்.

இந்த நிலையில் சாய்ந்தமருதுக்கு வழங்கப்பட்ட நகர சபை வர்த்தமானி அறிவிப்பு மீளப்பெறப்படும் என சற்று முன்னர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »