தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவின் பரிந்துரைகள் 20.02.2020ம் திகதி பாராளுமன்றத்தில் குழுவின் தலைவர் மலிக் ஜயதிலகவினால் சமர்பிக்கப்பட்டது.
அதில் இலங்கையர் என்ற சிந்தனை மற்றும் தனித்துவத்தை பேணும் சிங்கள தமிழ் முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
அனைத்து மாணவர்களுக்கும் ஒப்பீட்டு மதக் கல்வி மற்றும் கலாசார பண்மைத்துவக் கல்வி போதிக்கப்பட வேண்டும்.
இன மத மற்றும் சமுதாய அடையாளங்களை வெளிப்படுத்தும் பெயர்களுடன் கூடிய பாடசாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும்.
மத்ரஸாக்கள் விசேட கல்வி நிறுவனங்களாக கருதப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட மவ்லவிமார்கள் மூலம் கற்பித்தல் முன்னெடுக்கப்பட வேண்டும்.
16 வயது பூர்த்தியடைந்தவர்கள் தான் மத்ரஸாக்கள் சேர்க்கப்பட வேண்டும்.
