தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழுவின் பரிந்துரைகள் 20.02.2020ம் திகதி பாராளுமன்றத்தில் குழுவின் தலைவர் மலிக் ஜயதிலகவினால் சமர்பிக்கப்பட்டது.
அதில் மூன்று தசாப்தகால பயங்கரவாதத்திற்கு நாம் முகம் கொடுத்து வெற்றி பெற்றாலும் கடந்த 04/21 உயிர்த்த ஞாயிறு தினம் வழமைக்கு மாற்றமான தாக்குதல் ஒன்றுக்கு முகம் கொடுத்தோம்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முஸ்லிம் பயங்கரவாதம் அல்லது இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தாமல் புதிய பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
1990களுக்கு பின்னர் உலகில் தோன்றிய பயங்கரவாதத்திற்கு புதிய பயங்கரவாதம் என்றே குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் குறித்த பயங்கரவாதத்தின் பின்னால் இஸ்லாமிய அடிப்படைவாதம் இருப்பது ரகசியமானதல்ல.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பின்னர் முஸ்லிம் பயங்கரவாதம் அல்லது இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொற்கள் தலைதூக்கியதினால் பல ஆண்டு காலமாக இந்நாட்டில் வாழ்ந்து வரும் சிங்கள முஸ்லிம் தமிழ் மக்களிடம் குழப்பமான சூழல் தோன்றும் ஆபத்து ஏற்பட்டது. இது இன மற்றும் மத நல்லிணக்கம் மற்றும் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியது. என குறித்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
