அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்க்கு 22 பேர் உள்ளாகியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கொரோனாவினால் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் ஒருவர் மரணித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான 22 பேர்களில் 15 பேர் முழுமையாக குணமாகியுள்ளதாகவும் மீதமுள்ளவர்களுக்கு அதி தீவிர சிகிச்சையளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தினால் இதுவரை உலகம் முழுவதும் 2900ம் பேர் மரணித்துள்ளதுடன், 85000ம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
