ஜனாதிபதி கோத்தபாயவின் பதவியேற்பின் போதும் அதன் பின் அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதை அவதானிக்க முடிந்தது. அன்று அவர் செய்ததை இன்று சிலர் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்கள் முடிவுகளை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள். நாம் ஒரு போதும் அடிமைத் தனமாக முடிவெடுக்க முடியாது என்பதே எனது நிலைபாடு.
முடிவுகளை நியாயமாக நாம் எடுக்க வேண்டும் எது வந்தாலும் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.
ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கூட மக்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கலாம். அதை விடுத்து இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் இரண்டும் கெட்டான் நிலையாக வாக்குகளை பிரித்துப் போடுங்கள் என மிம்பர்களை பயன்படுத்தி சிலர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கையாலாகாத கதை.
யார் நியாயமாக நடந்து கொள்வார்களோ அவர்களை பற்றி நீங்கள் நியாயமாக முடிவெடுங்கள் என விட்டு விடுவதுதான் ஆண்மீகத் தலைவர்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். அதை விடுத்து மிம்பர்களை பயன்படுத்திக் கொண்டு “ஆபத்தான காலம்” “பயங்கரமான ஆட்சியாளர்கள். அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் போடுங்கள்” என்று சொல்வது நியாயமான காரியம் அல்ல.
