Our Feeds


Saturday, February 29, 2020

www.shortnews.lk

மலேஷியாவின் பிரதமர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார் மஹாதீர் முஹம்மத்

 


பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த மலேஷிய பிரதமர் மஹாதீர் முஹம்மத் புதிய பிரதமர் தெரிவு செய்யப்படும் வரை மலேஷியாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்டு வருகிறார். 

மலேஷியாவின் புதிய பிரதமர் போட்டியில் “பாக்காத்தான் ஹராப்பான்” கூட்டணி சார்பில் அன்வர் இப்றாஹீமும் எதிர்கட்சிகளின் கூட்டணியான “பாரிசான் நெஷனல்” சார்பில் மொஹிதீன் யாசீனும் முன்னனி வகித்தனர்.

இந்த நிலையில் தானும் மீண்டும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இணைந்துள்ளதாக மஹாதீர் முஹம்மத் இன்று காலை திடீரென அறிவிப்பு விடுத்துள்ளார்.

ஆளும் “பாக்காத்தான் ஹராப்பான்” கூட்டணி வேட்பாளர் அன்வர் இப்றாஹீம் எதிரணிக் கூட்டணி வேட்பாளரான மொஹிதீன் யாசீனுடன் கடுமையான போட்டியிட வேண்டி வரும் என்பதால் ஆளும் கூட்டணி தனது முடிவை மாற்றி மீண்டும் மஹாதீர் முஹம்மதுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »