Our Feeds


Monday, February 24, 2020

www.shortnews.lk

ரவுப் ஹக்கீம் அரசியல் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளார். அவருடன் JVP கூட்டணி அமைக்காது - ஹக்கீமுக்கு JVP இன்று பதில்

 


தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் மக்கள் விடுதலை முன்னனி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக நேற்று நடைபெற்ற மு.க வின் பேராளர் மாநாட்டில் ரவுப் ஹக்கீம் தெரிவித்திருந்த கருத்தை மக்கள் விடுதலை முன்னனி முற்று முழுதாக நிராகரித்துள்ளது.

ரவுப் ஹக்கீம் யார் பின்னால் வேண்டுமானாலும் செல்லட்டும். அரசியல் வங்குரோத்து நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதினால் யாரையாவது பிடித்து தொங்க பார்க்கிறார். JVP அவர்களுடன் இணையும் வகையில் எவ்வித பேச்சுக்களையும் நடத்த வில்லை என JVP யின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

JVP மக்கள் தேசிய சக்தியினூடாக பலமான கூட்டணியொன்றாக களமிறங்க பேச்சுக்களை நடத்தியுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »