இன்று (10) காலை இத்தாலி மற்றும் தென்கொரிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்த 181 பேர் பெட்டிக்கலோ கெம்பஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் 2 தென்கொரிய நாட்டவர்களும் 179 இலங்கையர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான், இத்தாலி, தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வருகை தருவோரை 14 நாட்கள் கொரோனா தடுப்பு முகாமில் வைத்து சிகிச்சை வழங்க முடிவெடுத்துள்ளதாக விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
