நீர்கொழும்பு அன்சார் ஹோட்டலில் நேற்று இரவு 9.45 க்கு நடைபெற்ற தகராறில் ஹோட்டல் ஊழியரான கெக்கிராவையை சேர்ந்த அஸீஸ் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
ஹோட்டல் உரிமையாளரான ஜிப்ரி மற்றும் அவர் சகோதரர் ரிஸ்வான் ஆகியோர் பலத்த வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் ஒன்றில் வந்த ஒரு குழுவினர் ஹோட்டலுக்குள் சாராயம் அருந்த முற்பட்ட வேலை அதனை ஹோட்டல் ஊழியரும், உரிமையாளர்களும் தடுத்துள்ளனர். இலங்கையில் எங்கும் சாராயம் அருந்தலாம் அதனால் இங்கு நாம் அருந்த போகிறோம் எனக்கூறி சாராயம் குடிக்க முற்பட்ட நேரத்தில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்திலேயே சண்டை ஏற்பட்டு வேனில் வந்த குழு ஹோட்டல் ஊழியர் மற்றும் உரிமையாளர்களை தாக்கி வெட்டியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசாரனை நடத்தி வருவதுடன் ஹோட்டல் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.


